அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ஹாஜியார் ஹஜ் உம்ரா சர்வீஸ்
ஹஜ் உம்ரா சேவையின் நம்பகமான நிறுவனம்
அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ் தஆலாவின் பேரருளால், எங்கள் நிறுவனம் ஹஜ் மற்றும் உம்ரா பயணம் மேற்கொள்ளும் இறைநம்பிக்கையாளர்களுக்கு, நம்பகமான மற்றும் தரமான சேவைகளை வழங்கி வருகிறது. உம்ரா பயணம் செய்யும் ஹாஜிகளுக்கு விசா ஏற்பாடு, விமானப் பயணம், தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து மற்றும் அனுபவமிக்க வழிகாட்டுதல் ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் சிறப்பாக வழங்கி வருகிறோம். உங்கள் உம்ரா இபாதத்தை மனநிம்மதியுடனும் பக்தியுடனும் நிறைவேற்றுவதற்காக, ஒவ்வொரு கட்டத்திலும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் சேவை செய்வதே எங்கள் நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும்.
﷽
﴾ أَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ﴿
ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்விற்காக நிறைவேற்றுங்கள்.
அல் குர்ஆன் 2:276
உம்ரா சேவைகள்
எங்கள் நிறுவனம், ஹஜ் மற்றும் உம்ரா இபாதத்தை செய்ய விரும்பும் ஹாஜிகள் அனைவருக்கும், மனநிம்மதியுடனும் முழு அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றுவதற்காக, அனைத்து வசதிகளுடன் கூடிய முழுமையான சேவைகளை வழங்குகிறோம்.
உம்ரா விசா
இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஹாஜிகளுக்கு விசா செயல்முறைகளை எங்கள் அனுபவமிக்க குழு முழுமையாக கையாள்கிறது. துல்லியமான ஆவணங்கள் மற்றும் விரைவான செயலாக்கம் எங்களின் சிறப்பம்சமாகும்.
விமான டிக்கெட்
தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து நம்பகமான விமான நிறுவனங்களுடன், வசதியான நேர அட்டவணையில் விமான முன்பதிவுகளை ஏற்பாடு செய்து, உங்களின் பயணம் சௌகரியமாகவும் சிரமமில்லாமலும் அமைய உறுதி செய்கிறோம்.
ஹோட்டல் தங்குமிடம்
புனித மக்கா மற்றும் மதீனாவில் ஹரம் அருகாமையில் அமைந்த, எக்கனாமிக் கிளாஸ் முதல் பிரீமியம் கிளாஸ் வகை வரை கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோட்டல்களை வழங்குகிறோம். தூய்மை, பாதுகாப்பு மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தமிழக உணவு
தமிழக பாரம்பரியமிக்க, உடல் நலத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் புனித பயணத்தின் முழு காலத்திலும், இபாதத்தில் ஈடுபட முடியும்.
போக்குவரத்து வசதிகள்
விமான நிலைய மாற்றங்கள் மற்றும் மக்கா–மதீனா இடையிலான பயணங்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து வாகன சேவைகள் வழங்குகிறோம்.
உம்ரா கிட்
எங்களின் அன்பளிப்பாக, ஒவ்வொரு ஹாஜிகளுக்கும் புனித பயணம் தொடங்குவதற்கு போது சிறப்பு உம்ரா கிட் வழங்கப்படுகிறது. இதில் பயணத்திக்கு உதவும் பல பொருட்களை வழங்குகிறோம்.
குழு வழிகாட்டுதல்
அனுபவமும் மார்க்க அறிவும் கொண்ட குழு வழிகாட்டி, தமிழ் மொழியில் உம்ரா இபாதத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கி, முழு பயணத்திலும் தொடர்ச்சியான ஆதரவை வழங்குகின்றனர்.
ஜியாரத் சுற்றுப்பயணம்
மக்கா மற்றும் மதீனாவில் உள்ள முக்கியமான இஸ்லாமிய வரலாற்று மற்றும் மார்க்க முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு, அனுபவமிக்க வழிகாட்டிகளுடன் கூடிய ஜியாரத் சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்கிறோம்.
மருத்துவ உதவி
பயணத்தின் போது யாத்திரையாளர்களின் பாதுகாப்பும் நலனும் உறுதி செய்யப்படுவதற்காக, அடிப்படை மருத்துவ உதவிகளும் தேவையான நேரடி ஆதரவும் வழங்கப்படுகின்றன, குறிப்பாக முதியவர்களுக்கு.
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
” الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ “
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.”
ஸஹீஹுல் புகாரி: 1773
உம்ரா புக்கிங் செயல் முறைகள்
தமிழக ஹாஜிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உம்ரா பேக்கேஜ்கள், விரைவான உம்ரா விசா செயல்முறை, மற்றும் முழுமையான பயண ஆதரவுடன் எங்கள் நிறுவனம் நம்பகமான உம்ரா சேவைகளை வழங்குகிறது.

இலவச ஆலோசனை
உங்கள் உம்ரா பயணத்தை தொடங்க, எங்கள் உம்ரா டிராவல்ஸ் குழுவை தொடர்பு கொண்டு இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் பட்ஜெட், பயண தேதிகள் மற்றும் இந்தியாவில் இருந்து புறப்படும் நகரத்தை அடிப்படையாக கொண்டு, சிறந்த பேக்கேஜ்கள் பற்றி பரிந்துரைக்கப்படும்.

உம்ரா பேக்கேஜ் தேர்வு செய்தல்
எகானமி, ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம் ஆகிய மூன்று வகைகளில், எங்களின் பேக்கேஜ்கள் உள்ளன. உங்களின் தேவைகளுக்கு ஏற்ப, நீங்கள் விரும்பும் பேக்கேஜை தேர்வு செய்யலாம்.

அட்வான்ஸ் தொகை & முன்பதிவு உறுதி செய்தல்
சிறிய ஆரம்ப கட்டணம் செலுத்துவதன் மூலம் உங்கள் உம்ரா முன்பதிவு உறுதிப்படுத்தப்படுகிறது. இதன் பின்னர், விசா மற்றும் விமான டிக்கெட் செயல்முறை தொடங்கப்படுகிறது.

உம்ரா விசா மற்றும் டிக்கெட் பெறுதல்
எங்கள் அனுபவமிக்க குழு, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கான விசா விண்ணப்பம் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றை விரைவாகவும் துல்லியமாகவும் செயல்படுத்துகிறது.

பயணத்தை உறுதி செய்தல்
விசா, விமான டிக்கெட், மக்கா & மதீனா ஹோட்டல் விவரங்கள் மற்றும் முழுமையான பயண திட்டம் (Itinerary) ஆகிய அனைத்தும் வாட்ஸ்அப் குழுவில் உடனடியாக வழங்கப்படும்.

உம்ரா பயணம் ஆரம்பம்
அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த பின், மனநிம்மதியுடனும் முழு நம்பிக்கையுடனும் உங்கள் புனித பயணத்தை தொடங்கலாம். முழு பயணத்திலும் எங்கள் குழு 24/7 ஆதரவுடன் உங்களுடன் இருக்கும்.
எங்களின் சிறப்பம்சங்கள்
தமிழக ஹாஜிகளுக்கு ஏற்ற வகையில் நம்பகமான உம்ரா டிராவல்ஸ், மலிவான உம்ரா பேக்கேஜ்கள், மற்றும் உயர்தர சேவைகளை வழங்குவதில் நாங்கள் சிறந்த நிறுவனமாக உள்ளோம்.
- மிக விரைவான உம்ரா விசா மற்றும் விமான டிக்கெட் ஏற்பாடு செய்தல்
- குறைந்த கட்டணத்தில் உயர்தர உம்ரா சேவைகள்
- மக்கா & மதீனாவில் வசதியான, சுகாதாரமான ஹோட்டல்ககளில் தங்குமிடம்
- தமிழ்நாட்டு சுவைமிகு உணவு வகைகள் - காலை மதியம் மற்றும் இரவு
- மக்கா & மதீனா ஜியாரத் சுற்றுப்பயணங்கள்
- குளிர் சாதன வசதியுள்ள, பேருந்துகளில் அனைத்து ஜியாரத் மற்றும் பயணங்கள்
- உம்ரா பயணத்திற்கு முன் மார்க்க விளக்க வகுப்புகள்
- WhatsApp குழு மூலம் தொடர்ச்சியான பயண தகவல்கள்
- 2 வது & 3 வது உம்ராவிற்கான இலவச போக்குவரத்து
- முதியவர்களுக்கு சிறப்பு கவனத்துடன் மருத்துவ உதவி
ஜியாரத் செல்லும் இடங்கள்
நாம் முதலாவது உம்ராவை நிறைவு செய்த பிறகு, புனித மக்கா மற்றும் மதீனாவின் கீழ்வரும் இஸ்லாமிய வரலாற்றின் சிறப்பு மிக்க இடங்களுக்கு நாம் ஜியாரத் எனும் சுற்றுப்பயணம் செல்லுவோம் இன்ஷா அல்லாஹ்.
மக்கா ஜியாரத்
1. ஹிரா குகை – அல்-நூர் மலை:
குர்ஆன் இறக்கி அருளப்பட்ட இடம்.
2. தவ்ர் மலை – தவ்ர் குகை:
ஹிஜ்ரத் பயணத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) மற்றும் அபூபக்கர் (ரழி) ஆகியோர் தங்கிய இடம்.
3. மினா & முஸ்தலிஃபா:
ஹஜ் வணக்கத்தின் போது செல்ல வேண்டிய மிக முக்கிய இடங்கள்.
4. அராஃபாத் மலை (ஜபலுர் ரஹ்மா):
ஹஜ் வணக்கத்தின் போது ஹாஜிகள் தங்க வேண்டிய இடம்.
5. அல்-ஜின் பள்ளிவாசல்:
ஜின்கள் குர்ஆனை செவியுற்ற இடம்.
6. தாயிப் நகரம்:
நபிகள் நாயகம் (ஸல்), மக்காவிற்கு பிறகு, இஸ்லாமிய அழைப்புப் பணி செய்ய சென்ற இடம்.
மதீனா ஜியாரத்
1. பத்ர்: இஸ்லாமிய வரலாற்றின் முதல் போர் நடந்த பத்ர் போர்க்களம் உள்ள இடம்.
2. குபா பள்ளிவாசல்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டிய முதல் பள்ளிவாசல்.
3. கிப்லதைன் (இரட்டை கிப்லா) பள்ளிவாசல்:
கிப்லாவின் திசை, மஸ்ஜித் அக்ஸா விலிருந்து மஸ்ஜித் அல் ஹரம் பள்ளிவாசலுக்கு மாற்றப்பட்ட இடம்.
4. உஹத் மலை:
இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாவது போர் நடந்த உஹத் பள்ளத்தாக்கு உள்ள இடம்.
5. சபா/கந்தக் பள்ளிவாசல்கள்:
அகழ்போர்(கூட்டுப்படை போர்) நடந்த இஸ்லாமிய வரலாற்று சிறப்புமிக்க இடம்.
உம்ரா பயணங்கள்
எங்களின் சென்ற உம்ரா பயணத்தின் புகைப்பட தொகுப்பு
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உம்ரா செய்வது எப்படி?
உம்ரா என்பது ஏழு விஷயங்களை, ஈமானோடு செய்யும் ஒரு வணக்கம் ஆகும்.
1. இஹ்ராம் அணிதல்
2. தல்பியா கூறுதல்
3. மக்காவிற்குச் சென்று, கஃபாவை தவாஃப் செய்தல்.
4. மகாமு இப்ராஹிம் அருகில் 2 ரக்அத் தொழுதல்
5. ஜம்ஜம் நீர் அருந்துதல்
6. ஸஃபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையில் ஸயீ செய்வது.
7. தலை முடியை மொட்டையடித்தல் அல்லது குறைத்தல்.
மீகாத் என்றால் என்ன?
இஹ்ராம் (தைக்கப்படாத வெண்ணிற ஆடை) அணிந்து, உம்ரா செய்ய தொடங்கும் முன் நிய்யத் வைக்க வேண்டிய எல்லைகள் (இடங்கள்).
பெண்களுக்கான உம்ரா சட்டங்கள் என்ன?
பெண்களுக்கான உம்ரா சட்டங்களில், இஹ்ராம், தவாஃப், ஸயீ ஆகியவை பொதுவானவை. ஆனால் பெண்கள் முடியின் சிறு பகுதியை கத்தரிக்க வேண்டும். மேலும், மாதவிடாய் ஏற்படும் காலங்களில் தவாஃபைத் தவிர்த்து மற்ற வணக்கங்களை செய்யலாம். மேலும் அவர்கள் முழுமையான பர்தா அணிந்து, நறுமணம் பூசாமல், நகைகள் அணிவதைத் தவிர்த்து, ஆண்களைப் போல சத்தமாக தல்பியா கூறாமல் மென்மையாகக் கூற வேண்டும்.
உம்ரா செய்வதற்கு வயது வரம்பு என்ன?
உம்ரா செய்வதற்கு குறிப்பிட்ட வயது வரம்பு ஏதும் இல்லை. குழந்தைகள் முதல் முதியவர்கள் உட்பட யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சவூதி அரசின் விதிகளின்படி, 18 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோருடன் உம்ரா செய்ய முடியும்.
உம்ரா செய்வதற்க்கான சிறந்த மாதம் எது?
உம்ரா செய்ய மிகச் சிறந்த மாதம் பரகத்தான ரமளான் மாதம். ஏனெனில் அந்த மாதத்தில் செய்யப்படும் நற்செயல்களுக்கு பல மடங்கு கூலி கிடைக்கும். ரமலானுக்குப் அடுத்த படியாக அக்டோபர் முதல் மார்ச் வரை
குளிர் மற்றும் வசந்த காலமாக இருப்பதால், உம்ரா செய்ய ஏற்ற மாதங்களாகும்.
உம்ரா பயணத்தின் போது சிம் கார்ட் பெற தேவையான ஆவணங்கள் ?
சவூதி சிம் பெறுவதற்கு,
உங்களின் பாஸ்போர்ட் நகல் (Copy) மட்டும் போதும்.
உம்ரா விசா கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும்?
சவுதி உம்ரா விசா பெறுவதற்கு, குறைந்தபட்சம் 2 நாட்கள். சில சமயங்களில் அதிக பட்சமாக ஒரு வாரம் ஆகலாம்.
ஹாஜியார் ஹஜ் & உம்ரா சர்வீஸ்
உங்கள் உம்ரா பயணங்களை திட்டமிட, சிறந்த உம்ரா பேக்கேஜ்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
